Description
நாகப்பன் _ புகழேந்தி
எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது; சிலவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது & இதுதான் கற்றலின் சித்தாந்தம். குறிப்பாக, பொருளாதாரம், சேமிப்பு, பங்கு வர்த்தகம்… இப்படி புதிது புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்துக்குத் தீனி போட இன்று நிறைய ஊடகங்கள் இருந்தாலும் எல்லோரும் கற்றுக்கொள்ள சிறந்த வழி, புத்தகம் எனும் அச்சு ஊடகம்தான். ஷேர் மார்க்கெட், சென்செக்ஸ் என்ற சொற்கள் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், பணத்தைப் பெருக்க நினைப்பவர்கள் இந்தச் சொற்களைத் தவிர்த்து விட்டு பணம் பண்ண முடியாது. செய்தித்தாள் முதல் தொலைக்காட்சி வரை இதற்கென்று தனியாக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு பணம் புழங்கும் துறை இது. எளிமையாகப் பணம் சம்பாதிக்க இருக்கும் ஆயிரம் வழிகளில் பங்கு வர்த்தகமும் ஒன்று. இந்தத் துறை குறித்து அறியாதவர்களுக்காக ஆனந்த விகடனில் சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில், பங்கு வர்த்தகத் துறையில் புகழ் பெற்று விளங்கும் நாகப்பன்_புகழேந்தி இருவரும் ஒரு குழந்தைக்குக் கதை சொல்வது போல மிக எளிமையாக விளக்கி, தொடராக எழுதினா
ரூ.65/-
Reviews
There are no reviews yet.