Description
வில்ஹெல்ம் லீப்னெஹட்
லீப்நெஹ்ட்( 1826_-1900 )ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின்.இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது.ஈக்களை தன் வலைப் பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள்,உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக் கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்கலின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம்.
ரூ.10/-
Reviews
There are no reviews yet.