தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

135.00

தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்கு உள்ள இடத்தினைப் போன்றே களப்பிரர் என்பாருக்கும் இடமுண்டு. தமிழகத்தின் இருண்ட காலம் களப்பிரர்களின் காலம் என்று சொல்லப்படுகிறது. களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள். களப்பாளர் என்றும் இவர்களை வரலாற்றாளர்கள் குறிப்பிடப் படுவதுண்டு. தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்ததாகவே தெரிகிறது. எனினும், தமிழ்மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக்காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களின் மூலம் என்ன? தமிழகத்தில் இவர்கள் வலிமைபெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர்கள் யார்? எவர்? என அத்தனை விவரங்களையும், கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர். களப்பிரர் காலத்தை விளக்கும் கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் போன்றவற்றை திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். களப்பிரர் காலத்து சமயங்கள், களப்பிரரின் நாணயங்கள், களப்பிரர் காலத்து மொழி வளர்ச்சி, சமயங்கள், கலைவளர்ச்சி என களப்பிரர்களைப் பற்றிய அரிய தகவல்களை ஆய்வு நோக்கில் இந்த நூல் சொல்கிறது. தமிழக வரலாற்றில் தவிர்க்கமுடியாத அரசர்களான களப்பிரரை மட்டுமல்ல தமிழகத்தின் வரலாற்றையும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.

Categories: , , Tags: , ,
   
Description

டி.கே.இரவீந்திரன்

ரூ.135/-

Additional information

Weight 0.199 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்”

Your email address will not be published. Required fields are marked *