Description
சாமி சிதம்பரனார்
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு – வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு – அதில் சாகும்வரை ஒளி உண்டு! எரிமலையைச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய் இறவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய் எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய் ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்சு வால்டேராய் எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார். இன்றைக்கோ இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார். பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் – இவரோ படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.