Product Description
தமிழ்மகன்
‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம்! பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.
ரூ.120/-
Reviews
There are no reviews yet.