Description
ஞாநி
தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறைகொண்டு சமூகத் தொண்டாற்றுவதை தமது கடமையாக எண்ண வேண்டும். சமூக அரசியலில் பங்குகொண்டு, தனி மனித சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு குடிமகனும் விழிப்பு உணர்வு பெறுவது அவசியம். மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் இரு கண்களாகப் பேணிக்காப்பதும் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய அரசியல் அமைப்பில்தான், மொழியாலும் இனத்தாலும் பிரிவினைவாதம் தோன்றி, அவ்வப்போது இந்திய ஜனநாயகத்தில் பிரச்னைகள் ஏற்படுவதும் சகஜமான நிலையாகிவிட்டது. சில நேரங்களில் இந்திய அரசியல் செயல்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், சிந்தனைத் தெளிவும் சமூக அக்கறையும் கொண்ட சிந்தனையாளர்கள் தங்களுடைய விமர்சனப் பார்வையில் கட்டுரைகள் மூலமும் கதைகள் மூலமும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படி, சமூக அக்கறையோடு இந்திய அரசியல் நாகரிகத்தையும் உள்ளடக்கி ‘தவிப்பு’ எனும் உணர்ச்சிமயமான நாவலைப் படைத்திருக்கிறார் ஞாநி. ஆனந்த விகடனில் 1998ல் தொடராக வெளியான, அரசியல் பின்னணி கொண்ட இந்த நாவலில
ரூ.80/-
Reviews
There are no reviews yet.