Description
சி.வி பாலகிருஷ்ணன்
கேரளத்தில் கஸபா என்னும் கற்பனை நகரம் ஒன்றை எழுப்பிக் காட்டி, அதன் மனிதர்களின் வழி இன்றைய வாழ்வு நிலை எவ்வளவு பயங்கரமானதொரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிகார வர்க்கம் விளிம்பு நிலை மனிதர்கள் மேல் செலுத்தும் அடக்குமுறைகள். கம்யூனிசம் என்னும் சித்தாந்தமே உருக்குலைந்துவிட்ட நிலைமை. புரட்சி என்னும் ஒன்று இனி உண்டா என்ற ஏக்கம், மனிதாபிமானம் மதிப்பிழந்து அராஜகம் மட்டுமே வெற்றிபெறுகின்ற புதிர், இவையெல்லாவற்றையும் கஸபா நகரத்து மனிதர்களின் வெளிவர முடியாத புதிர்ச்சூழலுக்குள் (லாபிரிந்த்) நிகழும் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் அறியும்போது நாம் இப்போது எந்த திசையில் இருக்கிறோம் என்ற கேள்வியை வாசகனுக்குள் இந்த நாவல் நிச்சயம் எழுப்பும். இன்றைய தலைமுறை மலையாள நாவலாசிரியர்களில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். அவருடைய புதிர்த்தன்மை மிகுந்த எழுத்து மலையாளத்தில் மிகவும் ரசிக்கப்படுகிறது.
ரூ.140/-
Reviews
There are no reviews yet.