தோற்றுப் போனவனின் கதை

85.00

சினிமா வரலாற்றில், உதவி இயக்குநர்களுக்கான ஏடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது. அவர்கள், வெள்ளித் திரையின் பின்னணியில் துள்ளித் திரிந்து, உழைப்பை முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தி, முடிவில் வரவு-செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் தெரியும் மிஞ்சியது ஏதும் இல்லை என்று. ஒரு திரைப்படத்தின் தொடக்கம் முதல் அந்தத் திரைப்படத்தின் வெற்றி விழா வரையில் நன்றி உள்ள ஜீவனாக உதவி இயக்குநர்கள் திரிந்த பிறகே உணர்வது, நன்றி மறந்த நல்லவர்கள் சூழ்ந்த உலகம் இது என்பதைத்தான். குறிப்பிட முடியாத வேலை நேரம், உத்தரவாதம் இல்லா நிலை, இயற்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கடின உழைப்பு, கௌரவம் பார்க்க முடியாத பிழைப்பு… என, பல்வேறு சமுதாயச் சவால்களை உதவி இயக்குநர்கள் தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள். இதுபோன்ற எண்ணிலடங்கா இன்னல்களையும் இனிய முகத்துடன் எதிர்கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக திரை உலகில் உதவி இயக்குநராக இருந்தவர் அழகேசன். இவர், தனது நண்பர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்ட விதம், திரைக் களத்தில் தனது பணியின் முக்கியத்துவம், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்குத் தான் செய்த உதவிகள், திரைத் துறை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை, ஏதோ நேற்று நடந்தது போன்று காட்சியின் பசுமை மாறாவண்ணம் தன் எண்ணங்களை எளிதில் விளக்கியுள்ளார். சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்கத் தயாராகி வரும் உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்புடன் சேர்ந்த சாதுர்யம் அவசியம் என்பதை, இவரின் திரை நினைவலைகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ‘சினிமாதான் என் வாழ்க்கை!’ என்று தீர்க்கமான தீர்மானத்தோடு களம் இறங்குபவர்களுக்கு, நூலாசிரியரின் இந்த நினைவு ஏடுகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும் என்பது உறுதி.

Categories: , , Tags: , ,
   
Description

அழகேசன்

ரூ.85/-

Additional information

Weight 0.131 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தோற்றுப் போனவனின் கதை”

Your email address will not be published. Required fields are marked *