Description
பா.பிரவீன்குமார்
இன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் பாதிக்கக் கூடும் என்பது கண்கூடான ஒன்று. மருத்துவத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன நோய் என்று கண்டறிய, சிகிச்சை அளிக்க என ஒவ்வொன்றுக்கும் புதிய தொழில் நுட்பங்கள், நவீன கருவிகள், மருந்து வகைகள் வந்து கொண்டே இருக்கின்றன. மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகள் மறைந்து, ‘சிறுதுளை அறுவைசிகிச்சை’ போன்ற முறைகளும் வந்துவிட்டன. என்னதான் மருத்துவத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், அதுபற்றிய விழிப்பு உணர்வு என்பது மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. தங்களுக்கு இன்ன நோய் வந்திருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் உயிரை விட்டவர்கள் பலர். ‘ஆரம்ப நிலையிலேயே வந்திருந்தால் மிகப்பெரிய செலவுகளைத் தவிர்த்து வெறும் மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி இருப்போம்’ என்று மருத்துவர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். என்ன நோயாக இருந்தாலும் சரி, அதற்குத் தீர்வு உள்ளது என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஜூனியர் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில் வெளிவந்த மருத்துவக் கட்டுரைகளைத் தொகுத்து ‘நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் ஒரே நூலாக வழங்கியிருக்கிறோம்.
ரூ.95/-
Reviews
There are no reviews yet.