Description
கிருஷ்ணானந்த சுந்தர்ஜி
ஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மதி தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. தவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் ‘நிம்மதி தரும் சந்நிதி’ என்ற தலைப்பில் ஆன்மீகத் தொடர் ஆரம்பித்தபோதே, அதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது. ‘திருத்தலங்களுக்கு நேரில் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என்ற ஆர்வம் பக்தர்களிடம் குடிகொண்டிருந்தாலும், எல்லா ஆலயங்களுக்கும் நேரில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் அமைகிறது. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும், எந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றும், அந்தக் கோயிலின் விசேஷ பூஜைகள் எப்போது நடக்கும் என்றும் அறியப்படும் விவரங்கள் குறைவுதான். மக்களைக் கவர்ந்த பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்த கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, கோயிலைப் பற்றிய புராணக் கதைகளுடன், கர்ணப் பரம்பரை கதைகளையும் இணைத்து
ரூ.65/-
Reviews
There are no reviews yet.