Description
துளசி கோபால்
புலம் பெயர்ந்த இலக்கியத்துக்கும், பயண இலக்கியத்துக்கும் நடுப்பட்டது இது. தமிழில் அபூர்வமான நிகழ்வு. துளசிக்கு இது கைவந்த கலையாக இருக்கிறது. துளசி கவனத்தில் இருந்து ஒரு சின்ன விஷயம் கூட தப்புவது இல்லை.
கொஞ்சம் மானுடவியல் (மாவோரிகளின் வாழ்க்கை, உணவு முறை, சாவுச் சடங்குகள் இப்படி), வேறே எங்கும் காணக் கிடைக்காத அசாதாரணமான நிகழ்ச்சிப் பதிவு (பெங்குவின் கூட்டம் சாலையைக் கடப்பது), நிதி நிலை(பிஜியில் இருந்து வந்த குஜராத்திகள் காசு சேரச் சேர அங்கே கொண்டுபோய் சேமித்து விட்டுத் திரும்புவது), நீதி நிலை (ஜூரராகப் போன அனுபவம்), சமையல் குறிப்பு (அன்சோ பிஸ்கட்), இன்றைய அரசியல் (ந்யூ லேபர் கட்சி 97 இடத்துக்கு தேர்தலில் நின்று, ஒரே ஒரு சீட் மட்டும் கைப்பற்றியது நம்ம ஊர் நினைப்பு வருது இல்லே)..
இப்படி, போகிற போக்கில் நுணுக்கமாக நியூசி வாழ்க்கையைப் பதிகிறார் துளசி.
ரூ.200/-
Reviews
There are no reviews yet.