Description
முஹம்மத் யூனுஸ்
இந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு சரியாக தரவுகள் கிடைப்பதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம்? நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது? அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா? அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது? அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர்? நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி? என்பதையெல்லாம் இந்நூலில் விவரித்து இந்தியாவின் தற்கால அரசியல் வரலாற்றை நமக்கு சுவைபட கூறியுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட அரசியல் உண்மைகள்தான் பல நேரங்களில் புதிய சரித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட விடுபட்ட உண்மைகள் பல இந்நூலில் உலா வருகின்றன. இந்தியாவை நிர்மாணித்த சக்திகளுடன், உந்துசந்தியாக இருந்த நூலாசிரியர் தம்மையும் சேர்த்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன்னுசாமி, சுவை குன்றாமல் மூலத்தை அப்படியே தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நம் தேசத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பக்கத்தைப் புரட்டுங்கள், விடுபட்ட உண்மைகள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
ரூ.210/-
Reviews
There are no reviews yet.