Description
அனிதா பட்
இன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பொன்&பொருள்களைப் பெருக்கலாம், வசதியாக வாழலாம் என்று வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்படி, வாழ்க்கையில் பணப் பிரச்னைகளாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், விலைவாசிகள் உயர்வதாலும் சிரமத்தில் திண்டாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும், வசதியாக வாழ விரும்புகிறவர்களுக்கும் தங்களின் சின்னச் சின்ன சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கையை வசதியாக, பாதுகாப்பாக வாழ வழி வகைகளைச் சொல்கிறது இந்த நூல். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட். அவள் விகடனில் தொடராக வரும்போதே பலபேருக்குப் பயன் தந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், நிச்சயம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கவும் வழிகாட்டும்!
ரூ.60/-
Reviews
There are no reviews yet.