மதராசபட்டினம் to சென்னை

100.00

பலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. மிகுந்த தேடுதலோடு சென்னை மாநகரம் கடந்துவந்த நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் கணக்காக இந்த நூலை அற்புதப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர் பார்த்திபன். ‘தினத்தந்தி’ பத்திரிகையில் சென்னை குறித்த வரலாறு தொடங்கிய நாள் முதல் அதனை வாசித்துச் சிலிர்த்தவன் நான். ஆங்கிலேயர்களின் தலைமை இடமாக இருந்த புனித ஜார்ஜ் கோட்டையின் உருவாக்கம் தொடங்கி ராயபுரம் ரயில் நிலையம், சேப்பாக்கம் அரண்மனை, ரிப்பன் மாளிகை, ஆர்மீனியன் தேவாலயம்… என சென்னையின் காலத்திய அடையாளங்களாக விளங்கும் அத்தனை இடங்களின் வரலாறுகளையும் இந்த நூல் விவரிக்கும் விதம் ரொம்பவே அலாதியானது. ‘யார் இந்த பார்த்திபன்? இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார்? யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார்த்துக் கொள்கிறார்?’ என இந்தத் தொடரைப் படிக்கிறபோதெல்லாம் ஆச்சர்யம் என்னை ஆட்கொள்கிறது. சாலச்சிறந்த இந்தத் தகவல் திரட்டும், சுவாரஸ்யம் குன்றாத அழகு நடையில் அதனை வார்த்திருக்கும் விதமும் வாசிக்கும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும். இந்த 300 ஆண்டுகால நிகழ்வுகளைப் படிக்கிறபோது, மதராசபட்டின மக்களில் ஒருவராக நீங்கள் மாறுவீர்கள் என்பது உண்மை!

Categories: , , Tags: , ,
   
Description

பார்த்திபன்

ரூ.100/-

Additional information

Weight 0.156 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதராசபட்டினம் to சென்னை”

Your email address will not be published. Required fields are marked *