Description
முனைவர் க.அழகுசுந்தரம்
தண்ணீர் கிடைக்காமல் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றைப் பயிர் செய்வதே விவசாயிகளுக்குப் பெரும் பாடு. சிறிது காலம் காத்திருந்தால் விளை பொருட்களை நிச்சயம் அதிக விலைக்கு விற்க முடியும் என்பது கண்கூடாகத் தெரிந்தாலும் அழுகும் பொருட்கள் என்பதால் நல்ல விலை கிடைக்கிறதோ அல்லது செலவு மட்டும் கிடைக்கிறதோ உடனே விற்க வேண்டிய நிர்ப்பந்தம் அதைவிடப் பெரும் பாடு. இப்படி அவசரமாக விற்காமல் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே வைக்காமல் அவற்றை பழச் சாறாகவோ வேறு வடிவமாகவோ மாற்றினால் அவற்றின் மதிப்பு கூடும். இப்படி மதிப்பைக் கூட்டிப் பாதுகாத்து லாபத்துக்கும் விவசாயியின் சௌகரியத்துக்கும் ஏற்றவாறு விற்க ஏராளமான வழி முறைகளை இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் க.அழகுசுந்தரம். காய்கறிகள் பழங்கள் மட்டுமல்லாமல் நெல் போன்ற தானிய வகைகளையும் திறமையாகவும் கவனமாகவும் பாதுகாப்பது மட்டுமல்ல சேமித்து, விற்பனை செய்யும் முறைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நெல்லில் உள்ள ஈரப்பதத்தைப் போக்கி மதிப்பைக் கூட்டிச் சேமிக்கும் முறை, சேமிக்கும் நெல்லைப் பூச்சிகள் தாக்காமலிருக்க வழிகள், பழங்களை நவீன முறையில் அழகுபடுத்தும் முறைகள், தங்களிடம் இருக்கும் பழங்களைச் சிறு அளவுகூட விரையமாக்காமல் மதிப்பைக் கூட்டும் யுக்திகள், பழங்கள் அதிக வெப்பத்தால் சீக்கிரம் கெட்டு விடுகின்றன. அவை கெடாமல் குறைந்த வெப்பத்தில் பாதுகாக்கும் ரகசியம், பறித்த பிறகும் பழங்கள் சுவாசிக்கின்றன; அவற்றின் சுவாசத்தை நீடிக்கும் மெழுகுப் பூச்சு ஆகிய அனேக ரகசியங்களை இந்த நூலில் உடைக்கிறார் நூல் ஆசிரியர். விளை பொருட்களின் மதிப்பைக் கூட்டுவதை விளக்குவதோடு உபயோகிக்கும் உபகரணங்க¬ளைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை அமைக்கும் விதம், சரியாகக் கையாள்வது, பராமரிப்பது ஆகிய யுக்திகளையும் விவரித்திருக்கிறார். பசுமை விகடனில் வெளிவந்த தொடர் பலரையும் சென்றடைந்து பயன்தரும்வண்ணம் நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. விற்பனையாளர்களிடம் தங்களை இழந்துவிடாமல் தாங்களே லாபம் பெறும் யுக்திகள் அடங்கிய இந்த நூல் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
ரூ.75/-
Reviews
There are no reviews yet.