Description
எஸ்.கே.முருகன்
உத்வேகம்… வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் தூண்டுகோல்கள். நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, ‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாகவே மாறுவாய்!’ என்ற வார்த்தைகள்தான். அதுபோல், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!’ என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும் தோல்வியை நெருங்கவிடாத மாவீரன் ஆனார். இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்களோடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ்.கே.முருகன். இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திர
ரூ.80/-
Reviews
There are no reviews yet.