Description
சி.கே.ரங்கநாதன்
வெற்றி பெறுவதற்கு ஆரம்பமாக இருப்பது திட்டமிடல். திட்டமிடாத பயணமும் திட்டமிடாத தொழிலும் இலக்கை அடைந்ததில்லை. ஆகவே, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் என்பது குதிரைக்குக் கட்டுகிற கடிவாளம் போன்றது. அதற்கு உதாரணம், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ‘மைக்ரோ சாஃப்ட்‘டைத் தோற்றுவித்த பில்கேட்ஸ். அவரின் இலக்கும் திட்டமிடலும், தனக்குத்தானே அவர் போட்டுக்கொண்ட இலட்சியக் கடிவாளமும் அவர் பக்கம் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது; செய்கிறது. அதற்காக எல்லோரும் பில்கேட்ஸ் போல மென்பொருள் துறையை நோக்கிப் படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. பில்கேட்ஸுக்கு மென்பொருள் துறை. உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ, எதில் ஈடுபாடோ அதை நோக்கிப் பயணிப்பதுதான் வெற்றிக்கான எளிய வழி. அடுத்து, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் மட்டுமே போதாது. வழிநடத்தலும் அவசியம். உங்களைச் சுற்றி உங்கள் வியாபாரத்தைச் சுற்றி யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லுதல் முக்கியம். இதுபோன்ற பல ‘டிப்ஸ்‘களுடன் ‘நாணயம் விகடன்‘ இதழில் சி.கே.ரங்
ரூ.65/-
Reviews
There are no reviews yet.