Description
மதன்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. ‘இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா?’ என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், ‘ஆரம்பித்த நேரம் சரியில்லையோ’ என்று ஒரு கணம்கூட அவர் தயங்கவில்லை. ‘இதுதான் சரியான சமயம்… உண்மைகளைச் சொல்வதனால் நன்மைதான் ஏற்படும்… தொல்லைகள் வருவதில்லை’ என்ற திடமான நம்பிக்கையோடு எழுதினார். மதன் மொகலாய சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல, உண்மையில் ஒரு மகத்தான வெற்றியாக தொடர் அமைந்தது. எந்தக் களங்கமும் அவர் எழுத்தில் இருக்கவில்லை. ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது. வாசகர்களும் ‘
ரூ.250/-
Reviews
There are no reviews yet.