Description
லதானந்த்
வனம், விந்தைகள் நிறைந்த பச்சை தேவதை. தன் மடியில் தவழ்கிற உயிர்களிடத்தில் அவள் நீங்காத கருணையும் அன்பும் பொழிபவள். எந்த உயிரையும் பட்டினியிட்டு பார்க்கும் பழக்கம் அவளுக்கு எப்போதும் இருந்ததில்லை. சிறிய உயிரான ஓணானிலிருந்து பாம்பு, சிறுத்தை, யானை, சிங்கம்… என்று எல்லா உயிர்களுக்கும் பசியாற்றி வாழ வழிசொல்லும் தாய். காட்டின் அடர்ந்த பசுமையும், அதில் வாழ்கின்ற உயிர்களும்தான் நாட்டின் அழியாச் செல்வங்கள். அத்தகைய காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். செழுமையான காட்டைப் பற்றியும் காட்டிலேயே ஜனித்து வாழும் உயிர்களைப் பற்றியும் பேசுவதுதான் வனங்களில் விநோதங்கள். நூலாசிரியர், தமிழ்நாடு வனத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் லதானந்த் என்கிற டி.ரத்தினசாமி. வனங்களின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிவந்த அனுபவம் பெற்றவர். சங்கத் தமிழில் இருந்து சென்னைத் தமிழ் வரை இவருக்கு அத்துபடி. தன் துறை சார்ந்த நுட்பமான அனுபவமும் எழுத்துத் திறமையும் இணைந்து வந்துள்ளதால் இந்த நூல் சிறப்பாகத் திகழ்கிறது. பூச்சிகளைத் தின்னும் தாவரம் எது? மாநில விலங்கு
ரூ.70/-
Reviews
There are no reviews yet.