Description
என்.எஸ்.ஸ்ரீனிவாசன்
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வருமான வரி தொடர்பான சலுகைகள் பற்றித்தான் மாதச் சம்பளக்காரர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் போதெல்லாம் இவர்கள் முகங்களில் பிரகாசம் கூடும்! அதே மாதிரி மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையில் வருமான வரி தாக்கல் பரபரப்பாக நிகழும். கடைசி நாளன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும்! அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருமான வரி பற்றிய நூல் இது. நூலாசிரியர் என்.எஸ்.ஸ்ரீனிவாசன் சென்னையில் பிரபலமான ஆடிட்டர். வரி, வரிவிலக்கு, வரிச்சலுகை மற்றும் வரி தொடர்பான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.வருமான வரி தொடர்பான, நடைமுறைக்கு இணங்கிச் செல்லக் கூடிய ஆலோசனைகளை நமக்குப் புரியும் விதத்தில் எளிமையாக இந்த நூலில் விவரிக்கிறார் இவர். ‘தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்ப உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச் சலுகை பெறலாம். இந்த வகையில் ஓராண்டில் 50,000 ரூப
ரூ.55/-
Reviews
There are no reviews yet.