Product Description
தமிழ்மகன்
தமிழ் நாவல் உலகில் சமகால சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆச்சர்யமான நாவல். திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ்ச் சினிமா உலகின் வளர்ச்சி ஆகியவற்றோடு வெட்டுப்புலி தீப்பெட்டியின் வளர்ச்சியை இணைத்துப் பின்னப்பட்ட விறுவிறுப்பான புனைவின் வழியே 20-ம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் மனசாட்சியைப் படம் பிடிக்கிறது இந்த நாவல். ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொண்டது. எழுத்தாளர்கள் வெங்கட்சாமிநாதன், எஸ்.வி.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் எழுத்தாளுமைகள் வெகுவாகப் பாராட்டினர். வலைதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வெளிவந்ததே இதற்குச் சான்று. ஏராளமான விருதுகளும் பெற்ற நாவல்.
Reviews
There are no reviews yet.