Description
காம்கேர் கே.புவனேஸ்வரி
இன்றைய இணைய உலகில், மனிதனின் உள்ளங்கைக்குள் உலகம் சுருண்டு உட்கார்ந்துகொண்டுள்ளது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், உலகின் எந்த மூலையில் உள்ள நபர்களையும் பார்க்க முடியும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊறுகாய் முதல் உயிருள்ள ஓவியம் வரை அனைத்தையும் விற்பனை செய்யக்கூடிய காலம் இது. வீட்டிலேயே இருந்துகொண்டு நாம் விரும்பும் எதையும் வீட்டுக்கே தேடி வரவைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் இணையமயமானதால் இவையெல்லாம் சாத்தியமாகின்றன. அதேபோல் சமூக வலைதளங்களால் இன்று அரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த சமூக வலைதளங்கள் மூலம் நம் திறமையை மூலதனமாக்கி வியாபாரத்தைப் பெருக்க, வாய்ப்புகள் வாசல் திறந்து வைத்து காத்திருக்கின்றன. நீங்கள் எவ்வாறு அந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி முன்னேறலாம் என்று வழிகாட்டுகிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இணையம் வழியே வேலை செய்து கொடுத்துவிட்டு அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போவோர் அனேகர். அவ்வாறெல்லாம் ஏமாறாமல் நம் தொழிலை, நம்மிடம் உள்ள திறமையைக் கொண்டு சமூக வலைதளங்களால் வளமான முன்னேற்றம் பெற, இந்த நூல் பல நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்கிறது. இமெயில், கூகுள்+, வெப்சைட், பிளாக், யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்க்குடுஇன், சவுண்ட் கிளவுட், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், பின் – என அனைத்து சமூக வலைதளங்களும் உங்கள் தொழில் திறனை உலகுக்குக் காட்ட காத்துக்கிடக்கின்றன. பக்கங்களைப் புரட்டுங்கள். உங்களுக்கு வளமான வாழ்வு காத்திருக்கிறது!
ரூ.215/-
Reviews
There are no reviews yet.