ஸ்பெக்ட்ரம் – சொல்லுங்கள் ராசாவே!

100.00

அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நேர்த்தியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர்புத் துறை, இப்போது ‘ஊழல்’ என்கிற புதைகுழியில் சிக்கி இருப்பது, நம்மை வேதனைப்படுத்துகிறது; வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது! மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் வழங்கப்படும் தொலைபேசி மற்றும் மொபைல் சேவையை நாடு முழுவதும் வழங்குவதற்கான டெண்டரை முடிவு செய்வதில் ஏற்பட்ட முறைகேடுதான் ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னை, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா குழுவினர் செய்த விதிமீறல்கள், இந்த ஒதுக்கீடு யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்டதற்கான ரகசியம், அவ்வாறு வழங்கப்பட்டதில் ராசாவுக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் கிடைத்த முதலீட்டு விவரம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, மத்திய கணக்கு தணிக்கைக் குழு… போன்ற துறைகள் வெளியிட்ட விவரங்கள், தீர்ப்புகள்… இவற்றை உள்ளடக்கி இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, 2007 மே முதல் 2011 பிப்ரவரி வரை, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்த நூல் _ ஊழலை உறித்தெடுக்கும்; உண்மை நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு விளங்கவைக்கும்!

Out of stock

Description

விகடன் பிரசுரம்

ரூ.100/-

Additional information

Weight 0.166 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்பெக்ட்ரம் – சொல்லுங்கள் ராசாவே!”

Your email address will not be published. Required fields are marked *