This page was exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Export date: Fri Mar 29 0:38:39 2024 / +0000 GMT

அலங்காரப்ரியர்கள்

Price: 90.00

Product Categories: , , ,

Product Tags: , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல? காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.'' இயற்கையைப் பற்றி இப்படியாக ஒரு சிந்தனை. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் சு.வெங்கடேசன். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாவலாசிரியர். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்ற வரலாற்று நாவலுக்கு 2011-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இவைதவிர திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் போன்ற நூல்களையும் படைத்துள்ளார். சிறந்த சொற்பொழிவாளர். இடதுசாரி சிந்தனையுள்ள இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். களஆய்வு மேற்கொண்டு காவல்கோட்டம் நாவலைப் படைத்த இவரின் எழுத்துக்களில் வெளிப்படும் சொல்லாடல்கள் தரம் மிகுந்தவை. இவர் சமகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த அலங்காரப்ரியர்கள். இதில் பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என தெரிந்துகொள்வதற்கு ஏராளமான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. எழுத்தால் நிரப்பப்பட்ட சொற்சித்திரத்தை ரசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.

Product Description

சு.வெங்கடேசன்

ரூ.90/-

Product Attributes

Product added date: 2016-09-30 11:48:39
Product modified date: 2016-12-03 10:36:32

Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.