மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Fri Apr 26 21:50:42 2024 / +0000 GMT

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள்

Price: 90.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!' என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா! அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்' என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு' சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.

Product Description

அருணகிரி

ரூ.90/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.144 kg

Product added date: 2016-09-29 18:10:06
Product modified date: 2016-12-03 10:17:51

Export date: Fri Apr 26 21:50:42 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.