மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
Export date: Fri Apr 19 22:31:43 2024 / +0000 GMT

உலக வரலாற்றுக் களஞ்சியம்

Price: 270.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

‘‘வரலாற்றை அறியாதவர்கள் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது!'' என்பார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் உண்மைகளையும் அறிவதே நிகழ்காலத்தியவர்களின் முதல் பாடமாக இருக்க முடியும். அந்த விதத்தில் ஆகச்சிறந்த அறிவுக் களஞ்சியமாக - கடந்த காலத்தின் கண்ணாடியாக மிளிர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.உலகம் தோன்றிய நிகழ்வு தொடங்கி இன்றைய காலம் வரை உலகத்தில் நிகழ்ந்திருக்கும் அத்தனைவிதமான நிகழ்வுகளையும் ஆதாரபூர்வத்துடனும், புள்ளிவிவரக் குறிப்புகளுடனும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஐ.சண்முகநாதன். மூத்த பத்திரிகையாளரின் ஆக்கபூர்வ முயற்சியால் உள்ளங்கையில் உலகம் புரட்ட உதவுகிற வரமாக இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது இந்த வரலாற்றுக் களஞ்சியம். மொழிகளின் தோற்றம், உலகளாவிய புகழ் பெற்றவர்களின் வரலாறு, உலகை உலுக்கிய நிகழ்வுகள், சிலிர்க்கவைத்த சிறப்புகள், உலகப்போர்கள் குறித்த தகவல்கள் என பல நூறு புத்தகங்களைப் படித்தாலும் அறிய முடியாத பேரற்புதத் தகவல் தொகுப்பாக வியக்கவைக்கிறது இந்தப் புத்தகம். மிகுந்த சிரத்தையோடு இந்தப் பதிவுகளைத் தொகுத்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு இன்றைய இளைய தலைமுறை நிறைய கடமைப்பட்டிருக்கிறது.உலகம் சுற்றிய மாவீரர்கள், விஞ்ஞான வித்தகர்கள், புகழ் பெற்ற புரட்சியாளர்கள் என மாணவர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அறிய வேண்டிய அற்புத மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யம் மிகுந்த நடையில் விவரிக்கிறது இந்தப் பெருமைமிகு புத்தகம். இந்தியாவின் கடந்தகால நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் பதிவுகள் வரலாற்றுப் புத்தகங்களை விஞ்சத்தக்கவை. இதிகாச காலம் தொடங்கி இன்றைய அரசியல் நிலவரங்கள் வரை தேர்ந்த நடையில், தெளிவான முறையில் தொகுத்திருப்பது காலத்துக்கும் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் சாலச்சிறந்த தமிழர்களை வகைப்படுத்தி, இன்றைய தலைமுறைக்கு அவர்களின் சிறப்புகளை விளக்கி இருப்பது காலத்திய கடமையாகச் சிலிர்க்க வைக்கிறது. வரலாறு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், போர், புரட்சி என அத்தனைவிதமான நிகழ்வுகளையும் நடுநிலைப் பார்வையோடு பதிவு செய்திருக்கும் இந்த நூல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் ஆயுதம்.

Product Description

ஐ.சண்முகநாதன்

ரூ.270/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.431 kg

Product added date: 2016-09-29 11:35:31
Product modified date: 2016-12-02 13:01:40

Export date: Fri Apr 19 22:31:43 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.