மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d/
Export date: Wed Apr 24 17:54:32 2024 / +0000 GMT

எந்நாடுடைய இயற்கையே போற்றி

Price: 140.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d/

Product Summary

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை'. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்! உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!' என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!

Product Description

டாக்டர் கோ.நம்மாழ்வார்

ரூ.95/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.145 kg

Product added date: 2016-10-06 13:11:04
Product modified date: 2022-06-10 11:09:36

Export date: Wed Apr 24 17:54:32 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.