மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
Export date: Tue Apr 30 16:07:46 2024 / +0000 GMT

சிப்பாய் கலகம்

Price: 65.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

மதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான்! ஆம்! சிப்பாய்ப் புரட்சி! இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது? 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்' என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை படுகொலைகள்? குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது? ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது? வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.

Product Description

சிவதர்ஷினி

ரூ.65/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.145 kg

Product added date: 2016-09-29 11:30:41
Product modified date: 2016-12-02 13:04:01

Export date: Tue Apr 30 16:07:46 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.