சிறகை விரி, பற!

80.00

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக – ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற!’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்! எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு! விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்!

Out of stock

Categories: , , Tags: , ,
   
Description

பாரதி பாஸ்கர்

ரூ.80/-

Additional information

Weight 0.144 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறகை விரி, பற!”

Your email address will not be published. Required fields are marked *