சே குவாரா

80.00

அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையும், கியூபா நாட்டு ரூபாய் நோட்டில் அதிகார கையெழுத்திடும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்ததையும் நினைத்தாலே, இன்றைய இளைஞர்களுக்கு செயல் ஊக்கம் ஏற்படும். ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு விடுதலைக்கு, வேற்று நாட்டவரான சே குவாரா மீது நம்பிக்கை வைத்தது, கியூபாவில் அமைச்சராகும் அளவுக்கு அந்த நாட்டு மக்கள் அவர் மீது நட்பு வைத்தது, சொகுசான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும், காடுகளிலும் மலைகளிலும் சீறிப் பாய்ந்து, எதிரிகளை நேருக்குநேர் சந்தித்துப் போராடி தன்னை வருத்திக்கொண்டது, கடைசியாக அமெரிக்க உளவுப் படையால் வேட்டையாடப்பட்டு சுடப்பட்டது… இப்படி, சே குவாராவின் வாழ்க்கையில் ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்ச்சிகளை, எழுச்சிமிகு தமிழில், விறுவிறுப்பான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கியூபாவில் புரட்சி செய்து வெற்றி அடைந்ததையும், காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சி செய்து தோல்வி அடைந்ததையும், சே குவாரா எப்போதும் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. விடுதலைப் புரட்சிக்காக விதைக்கப்பட்ட விதைகள் என்றே அவற்றைக் கருதியிருப்பது, இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். மக்கள் விரும்பிய போராளி சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

Categories: , , Tags: , ,
   
Description

அஜயன் பாலா

ரூ.80/-

Additional information

Weight 0.162 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சே குவாரா”

Your email address will not be published. Required fields are marked *