This page was exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Export date: Thu Mar 28 12:50:00 2024 / +0000 GMT

சொல்வனம்

Price: 495.00

Product Categories: , , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

பத்திரிக்கை உலகில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்த விகடன் என்றால், அதற்கு முழுமுதல் காரணம் வாசகர்கள்தான். ஆனந்த விகடனின் இதயத் துடிப்பான வாசகர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பகுதிதான் ‘சொல்வனம்'. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தரமான கவிதைகளை வெளியிட்டு வருகிறோம். தற்போது அந்தப் பகுதியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளையும் தொகுத்து புத்தகமாக வடிவமைத்திருக்கிறோம். இதில் வெறும் கவிதைகள் மட்டுமல்ல, கலைநயமிக்க ஓவியங்களும், உணர்ச்சிமிகு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை கவிதை தரும் வாசிப்பு இன்பத்துக்கு நிகரான காட்சிப் பரவசத்தையும் தரும். ஆனந்த விகடனில் ‘சொல்வனம்' பகுதியில் பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் வாசகனுடைய வலி, வேதனை, சந்தோஷம், துக்கம் என ஏதேனும் ஓர் உணர்வு வசீகரிப்பதே இந்தக் கவிதைகளின் சிறப்பு. எல்லா வாசகர்களும் கவிஞர்களாக இருக்க முடியாது. ஆனாலும், அவர்களுடைய கவித்துவத்தை வெளிக்கொணர்ந்து, அங்கீகரித்து கவிஞர்களாகத் தூக்கிப்பிடிப்பதில் பெருமைகொள்கிறது விகடன். இலக்கிய மரபுகளை உடைத்து, யதார்த்த மனிதர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புதான் தற்போது உங்கள் கைகளில் கவி வனமாக விரிந்து கிடக்கிறது. கவித்துவத்தின் மகத்துவத்தை உணர வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனெனில், இவை கற்பனைக் கவிதைகள் அல்ல; சாமானிய மக்களின் ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டம்!

Product Description

ரூ.495/-

Product Attributes

Product added date: 2016-09-30 11:19:35
Product modified date: 2016-12-03 10:26:06

Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.