மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Thu Mar 28 19:34:50 2024 / +0000 GMT

ஜெயகாந்தன் கதைகள்

Price: 360.00

Product Categories: , , ,

Product Tags: , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். 1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர். ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் ‘விகடன்' பிரசுரத்துக்கே வழங்கியுள்ளார்கள். அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது. வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, ‘ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்' - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.

Product Description

ஜெயகாந்தன்

ரூ.360/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.551 kg

Product added date: 2016-09-30 11:51:57
Product modified date: 2022-01-14 03:26:42

Export date: Thu Mar 28 19:34:50 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.