மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/
Export date: Sat May 11 3:33:55 2024 / +0000 GMT

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது?

Price: 200.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/

Product Summary

ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்' என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக நம்பாமல் இருப்பதாலும்தான்... துன்பம் வரும்போது நிலைகொள்ளாமல் தவிப்பதும், திடீரென்று செல்வம் வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குவதுமான நிலை நமக்கு ஏற்படுகிறது. ஜோதிடத்தை எந்த நிலையில் வைப்பது, எப்படிக் கையாள்வது என்பதை சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் இந்த நூலில் அருமையாக விளக்கியிருக்கிறார். ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம் என்றெல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

Product Description

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரூ.200/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.301 kg

Product added date: 2016-10-07 13:06:35
Product modified date: 2022-06-10 10:59:37

Export date: Sat May 11 3:33:55 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.