தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள்

120.00

வாழ்வு சுவை மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்கள். பல்வேறு நிலைகளில் பலரது வாழ்வு பட்டியலிடப்பட்டு வந்திருக்கிறது. அரசியல், விஞ்ஞானம், ஆட்சி பீடம், விளையாட்டு, தொழிற்துறை என எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுத்தாளர்களால், வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டு, உருவாக்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், வாழ்வில் எத்தனையோ சுவாரசியங்களை சுமந்து அமைதியாக வாழ்ந்த அதிசயக்கத்தக்க மனிதர்கள் எத்தனையோ பேர். குறிப்பாக, நம் தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுமைகள் இதுபோல் வாழ்ந்தும், வெளிக்காட்டப்படாமலும் இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நூலாசிரியர் குகனின் உந்துதலே இந்த நூல் வெளிவரக்காரணம். சுவாரசியம் மிகுந்த மனிதர்களின் வாழ்வியலை எழுதுவதற்கு கற்பனை வளமோ, கவித்துவமோ தேவையில்லை. உண்மை மட்டும் முழுமையாக தெரிந்தால் போதும். இந்த நூல் அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றிய உண்மையைப் பேசுகிறது. நீங்கள் கேள்விப்பட்ட அல்லது அறிந்திருக்கக்கூடிய மனிதர்களின் குணநலன்களை, வாழ்வியல் ரகசியங்களை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. தன் நண்பனுக்காக சிறைத்தண்டனை பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் தூக்குமேடைக்குச் செல்லும் முன் என்ன செய்தார் தெரியுமா? ‘ஒரு சிலம்பம் கொடுத்தால் அதனைச் சுற்றிவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னாராம். இதுபோன்ற எத்தனையோ சுவை மிகுந்த தகவல்கள் இந்த நூலின் பக்கங்களில் இரைந்து கிடக்கின்றன. நூலாசிரியர் குகன், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மாணவர். தன்னுடைய குருவைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள், இன்று குன்றில் இட்ட விளக்காக உங்கள் கைகளில் புத்தகமாகத் தவழ்கிறது. வாருங்கள், விளக்கின் வெளிச்சத்தில் ‘பெரும்புள்ளி’களைக் காண்போம்.

Categories: , , Tags: , ,
   
Description

குகன் (தி.அ.சொக்கலிங்கம்)

ரூ.120/-

Additional information

Weight 0.221 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள்”

Your email address will not be published. Required fields are marked *