This page was exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Export date: Fri Mar 29 2:19:25 2024 / +0000 GMT

நாட்டு மருந்துக்கடை

Price: 105.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/

Product Summary

மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை'க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!

Product Description

மருத்துவர் கு.சிவராமன்

ரூ.105/-

Product Attributes

Product added date: 2016-09-26 17:50:08
Product modified date: 2016-12-02 12:07:53

Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.