மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/
Export date: Wed Apr 24 12:43:32 2024 / +0000 GMT

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

Price: 115.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/

Product Summary

இன்றைய தினம் பெரும்பான்மை மனிதர்களை கவலைப்பட வைக்கக்கூடியது எது தெரியுமா? அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும்? ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...' என மற்றவர்கள் கேட்கத் தோன்றும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது? இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா? இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி? அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே?' என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம்? அந்த உணவு வகைகள் என்னென்ன? இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது? உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அடுக்குகிறார் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் உறுதியாகும். உடல் உறுதியானால் நீரிழிவு ஓடிப்போகும். கட்டுப்பாடுள்ள உணவுகளை அடையாளம் காட்டி, உணவுக் குறிப்புகளையும் வகைப்படுத்துகிறது இந்த நூல். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நூல் புத்தகமல்ல... புதையல்.

Product Description

யசோதரை கருணாகரன்

ரூ.115/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.177 kg

Product added date: 2016-09-26 18:04:32
Product modified date: 2016-12-02 12:17:10

Export date: Wed Apr 24 12:43:32 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.