நீலம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

450.00

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை.

கம்சனும் ராதை அளவுக்கு கிருஷ்ணனை எண்ணிக் கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இருவழிகளையும் இருவகை யோக மரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்னும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது.

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல் நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்து வைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச் செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

**** பைபிளை மிஞ்சும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய இலக்கியப் படைப்பாக உள்ள மகாபாரதத்தை, நாவல் வடிவில் எழுதும் ஜெயமோகனின் முயற்சி மிகவும் தைரியமானது – கமல்

* பெரிய மகத்தான முயற்சி – அசோகமித்திரன்

* நவீன படைப்பிலக்கிய ஆளுமையோடு ஜெயமோகன் எழுதத் தொடங்கியிருக்கும் இந்த மகாபாரத நாவல் ஒரு மைல்கல்லாக அமையும் – நாஞ்சில் நாடன்

* இது உலகப் பேரிலக்கியமாக மலர வேண்டும் – பிரபஞ்சன்

* திரைத்துறையில் நானும் கமலும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் – இளையராஜா

Categories: , , , Tags: , ,
   
Description

ஜெயமோகன்

ரூ.450/-

Additional information

Weight 0.702 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீலம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)”

Your email address will not be published. Required fields are marked *