மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-2/
Export date: Tue Apr 23 15:17:14 2024 / +0000 GMT

பேசாத பேச்செல்லாம்

Price: 185.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-2/

Product Summary

‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி' என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி' என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...' தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

Product Description

ப்ரியா தம்பி

ரூ.185/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.277 kg

Product added date: 2016-09-27 18:16:27
Product modified date: 2016-12-02 12:41:39

Export date: Tue Apr 23 15:17:14 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.