This page was exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Export date: Fri Mar 29 13:30:55 2024 / +0000 GMT

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்

Price: 195.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%99/

Product Summary

சூரியன், சந்திரன், நட்சத்திரம் இந்த மூன்று ஒளிகளும் இணைந்து உருவானது ஜோதிடம். ஜோதிஸ் என்ற சொல்லுக்கு பிரகாசம், விளக்கம், விளக்கு, ஒளி என்று பொருள் கொள்ளலாம். இருட்டில் மறைந்த பொருட்களை அடையாளம் காண விளக்கு பயன்படும். அதுபோன்று, இந்தப் பிறவியில் நமது சிந்தனைக்கு எட்டாமல் மறைந்திருக்கும்... முற்காலத்தில் நாம் செய்த செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான் ஜோதிடத்தின் வடிவம்! முற்காலச் செயல்பாடுகளின் விளைவுகளே கர்மவினை என்று விளக்கப்படுகிறது. ராசியோடும் நட்சத்திரத்தோடும் இணைந்த கிரகங்கள் காலத்துடன் இணைந்து, காலம் வழியாக நம்மில் இணைந்து கர்மவினைகளை- இன்ப, துன்பங்களை உணரவைக்கும். அப்படி, நாம் சந்திக்கப்போகும் அனுபவங்களை, மகரிஷிகளின் சிந்தனை முன்னரே கோடிட்டுக் காட்டிவிடும். ஆம்! கர்மவினை, காலம், முனிவர்களின் கணிப்பு ஆகிய மூன்றுமே ஜோதிடப்பகுதியின் அடித்தளம் என்று அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அவற்றின் அடிப்படையில் த்ரிம்சாம்சகம், த்ரேக்காணம் முதலானவற்றின் பங்களிப்புகளும் விவரிக்கப்படுகின்றன. ‘‘கர்க்கடக ராசி லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ அமைந்து, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருப்பாள்; ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் ஒன்றில் லக்னம் அல்லது சந்திரன் ‘குரு த்ரிம்சாம்சகத்'தில் இருக்கும் வேளையில் பிறந்தவள் குணக் குன்றாகத் திகழ்வாள். தனுசு அல்லது மீன ராசியில் பிறந்தவேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இணைந்திருக்கும்போது, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அறவழியில் வாழ்க்கைப் பயணத்தை ஏற்பதில் ஆர்வமுள்ளவளாகத் திகழ்வாள்...” & இப்படி பெண்களின் குணாதிசயங்கள்-&இயல்புகள் குறித்த ஜோதிட சிந்தனைகளையும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். சக்தி விகடனில் ‘சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்' என்ற பெயரில் இது தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடம் அமோக வரவேற்பு! அந்தத் தொடரே ‘மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்' எனும் நூலாக வெளிவந்துள்ளது. ஆன்மிகப் பெருமக்களும் ஆன்றோர்களும் போற்றும் நூலாக இது திகழும் என்பதில் ஐயமில்லை!

Product Description

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரூ.195/-

Product Attributes

Product added date: 2016-10-07 13:02:34
Product modified date: 2022-06-10 11:02:30

Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.