மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
Export date: Thu May 9 22:31:04 2024 / +0000 GMT

மனிதமும் உரிமையும்

Price: 25.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

"மனித உரிமைகள் பற்றிய தகவல் தொகுப்புகளாகவும் கருத்துக் குவியல்களாகவும் புதிய வாசகர்களுக்கு அயர்ச்சியூட்டும் விதமாகவும் பல புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன.அவை எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டு எளிய தமிழில் தமிழகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை முன்வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப்போரில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ந்துபோன அறிஞர்கள் இனியும் இப்படி ஒரு துயரம் நிகழாது இருக்க மனிதம் பாதுகாக்கப்பட சில சட்டங்கள் தேவை என உணர்ந்தனர்.அதன் விளைவாக1948டிசம்பர்10இல் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா.பொதுச்சபை வெளியிட்டது.ஆனாலும் ஐ.நாவில் உறுப்பு நாடாக இருந்து கொண்டே பல மனித உரிமை மீறல்களைச் செய்யும் அரசுகளும் மீறல்களைக் கண்டு கொள்ளாத அரசுகளும் இருக்கத்தான் செய்கின்றன.சிலியிலும்,குஜராத்திலும்,சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடும் பெயரால் கர்நாடக தமிழக எல்லைப்பகுதி மக்கள் மீதும் என நடத்தப்பட்ட கொடுமைகளை முன்வைத்து சித்திரவதை பற்றிய ஐ.நா.பிரகடனம் விளக்கப்பட்டுள்ளது.பெண் சிசுக் கொலையிலிருந்து காதல் திருமணங்கள் முறியடிக்கப்படுவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வரை எவ்விதம் பெண் உரிமைகள் பற்றிய பிரகடனம் மீறப்படுகிறது என்பது விளக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும் முன்வைக்கிறது.பழங்குடி மக்கள் வாழ்வுரிமை,குழந்தைகளுக்கான உரிமைகள்,வீடற்றவர்களுக்கான மனித உரிமைகள்,சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் புத்தகம் மரண தண்டனை தேவையா என்கிற விவாதத்தை முன்வைத்து சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சமயம் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நாம் மனித உரிமைகளை நிறுவப் போராட வேண்டும் என்கிற அறைகூவலோடு புத்தகம் முடிகிறது."

Product Description

ச.பாலமுருகன்

ரூ.25/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.67 kg

Product added date: 2016-09-07 11:38:34
Product modified date: 2016-11-29 19:41:54

Export date: Thu May 9 22:31:04 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.