மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Tue Apr 16 23:45:15 2024 / +0000 GMT

மயக்குறு மகள்

Price: 140.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலும் மயங்கிய அன்னை தமிழ்மொழியில் அதை வர்ணித்து, வடித்து எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் இது. பிறந்த குழந்தை தனது பிஞ்சு விரலால், தத்தி தத்தி நடக்கும் பஞ்சு கால்களால், கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை மொழியால், சில நேரங்களில் பொய்யாய் ஏமாற்றி பேசுவதும்... பல நேரங்களில் தன் சுட்டித்தனத்தால் எல்லோரையும் வியந்து பார்த்து ரசிக்கும் வகையில்... என நடந்த மொத்த நிகழ்வுகளையும் பொக்கிஷமாக இந்த அன்னை வடித்துத் தந்திருப்பது நூலின் சிறப்பாகும். “ ‘க்' மாதிரி சம்மணம் போட்டு உட்காரு...” என்ற அன்னையிடம் “அம்மா, இன்னிக்கு ஒரு நாள் ‘த்' மாதிரி காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேனே” என்கிறபோது இங்கே தாய்க்கும் மகளுக்குமான தமிழ்மொழியின் உரையாடல் வியங்கவைப்பதோடு மயங்கவும் வைக்கிறது. பல நேரங்களில் தன் அன்னையை குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் நினைத்து சீராட்டுவதைக் கண்ட அன்னையின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது. மயக்குறு மகளின் குறும்புகள் அடங்கிய இந்த நூல், உங்களது மழலைப் பருவத்தையும் உங்கள் பிள்ளையின் பொன்னான குழந்தை பருவத்தையும் நினைப்பூட்டி கண் முன்னால் திரையிட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.

Product Description

காயத்ரி சித்தார்த்

ரூ.140/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.241 kg

Product added date: 2016-10-15 12:03:22
Product modified date: 2016-12-03 18:47:04

Export date: Tue Apr 16 23:45:15 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.