மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b2/
Export date: Thu Apr 25 20:28:01 2024 / +0000 GMT

மானாவாரியிலும் மகத்தான லாபம்

Price: 70.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b2/

Product Summary

‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!' - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்? நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி!' என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்!' சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி!

Product Description

பொன். செந்தில்குமார்

ரூ.70/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.131 kg

Product added date: 2016-10-06 13:08:25
Product modified date: 2022-06-10 11:10:11

Export date: Thu Apr 25 20:28:01 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.