மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/
Export date: Sun May 12 11:38:10 2024 / +0000 GMT

மீத்தேன் எமன்

Price: 85.00

Product Categories: , , ,

Product Tags: , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/

Product Summary

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர், ‘What is your culture?' என்று கேட்டபோது, ‘Our Culture is Agricultue' என்று படேல் பதில் சொன்னார். அப்படிப்பட்ட விவசாயத்தால் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விளைநிலங்கள் இன்று வேகவேகமாக இறுகி, கருகிக்கொண்டு வருகின்றன. மீத்தேன் எடுக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு, ராட்சத எந்திரங்களாலும், பிரம்மாண்ட பெட்ரோல் கிணறுகளாலும் பயிர் குலுங்கும் விளைநிலங்கள் பாழ்பட்டுப் போவதைக் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர், டெல்டா பகுதி விவசாயிகள். மீத்தேனை எடுக்க உறிஞ்சப்படும் நீரின் அளவு, அதனால் சூறையாடப்படும் ஆறுகளின் கதி என்னவாகும் என்ற புள்ளிவிவரமே எதிர்காலம் என்னவாகுமோ என்ற அதிர்ச்சியைக் கொடுக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பெரிய பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், கேஸ் கிணறுகளால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களும் விவசாயிகளும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பேராபத்தைகளையும் விரிவாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர் கு.ராமகிருஷ்ணன். பசுமை விகடனில் தொடராக வெளிவந்தபோது பலரையும் மீத்தேனுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. யானை கட்டி போரடித்த மண், இன்று மீத்தேன் அசுரனால், எப்படியெல்லாம் இயற்கை வளம் குறைந்து அழிந்து வருகிறது என்பதை ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகிறது இந்த நூல்.

Product Description

கு.ராமகிருஷ்ணன்

ரூ.85/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.177 kg

Product added date: 2016-09-23 18:32:27
Product modified date: 2016-12-02 10:38:52

Export date: Sun May 12 11:38:10 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.