மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/
Export date: Fri Apr 26 6:44:20 2024 / +0000 GMT

முதலாம் இராசராச சோழன்

Price: 150.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/

Product Summary

தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், பழைய காசுகள் போன்றவை இராசராசனின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. தன் ஆட்சியில் நிழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால வரைமுறைப்படுத்தி, இனிய தமிழில் ‘மெய்க்கீர்த்தி'யாக அவன் வெளியிட்டுள்ளான். அவை, அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த மெய்க்கீர்த்தி முறையைப் பின்னால் வந்த அரசர்கள் பலரும் போற்றிப் பின்பற்றியுள்ளனர். சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து' என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். நீர் வளமும், நிலவளமும் இருந்தால் மட்டும் ஒரு பேரரசை ஆட்சி செய்துவிட முடியுமா? ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி' என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன! மாமன்னன் இராசராசனின் புகழுக்கு தஞ்சை பெரியகோயில் ஒன்றே போதும். அது வானுயர்ந்து நிற்கும் நற்சாட்சியாக உள்ளது. இராசராச சோழன் அரியணையில் ஏறிய காலத்தில் வட இந்திய அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன; எங்கும் உட் பகையாகிய புகை மண்டலம் படர்ந்திருந்தது. வெளி நாட்டவருக்குத் தாய்த் திருநாட்டைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகள் நாட்டின் பல பகுதிகளில் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தனர். இத்தகைய இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்திருந்த காலத்தில், விந்திய மலைக்குத் தெற்கே, இராசராசன் சோழப் பேரரசை நிறுவியது எப்படி? அவனது ஆட்சியில் தென்னாடு பொன்னாடாக மாறியது எப்படி? தமிழனின் பண்பாட்டை, தமிழனின் வாழ்வியலை இராசராசனின் ஆட்சி எவ்வாறு பிரதிபலித்தது என்பதை நூல் ஆசிரியர் கே.டி.திருநாவுக்கரசு விவரித்துள்ளார். வாருங்கள்! இராசராசனின் வரலாற்றை அறிவோம்! தமிழனின் வாழ்வியலை உணர்வோம்!

Product Description

கே.டி.திருநாவுக்கரசு

ரூ.150/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.256 kg

Product added date: 2016-09-29 17:32:07
Product modified date: 2016-12-02 13:08:23

Export date: Fri Apr 26 6:44:20 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.