மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
Export date: Tue May 7 21:42:53 2024 / +0000 GMT

மௌனியின் மறுபக்கம்

Price: 75.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

“மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விமர்சகர்கள் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்டவர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு வேறு விதமாக வர்ணிப்பதுபோல, மௌனியின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வேறு விதமாக வர்ணிக்க இயலும். இதுவும் இது மிகச் சிறந்த இலக்கியம் என்பதற்கு ஓர் அத்தாட்சியே ஆகும்.” - இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் 1967-ம் ஆண்டு மௌனியின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் இவை. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பவர் ‘சிறுகதைத் திருமூலர்' மௌனி ஒருவர் மட்டுமே. சிறுகதைகளைத் தவிர, ‘ஆனந்த விகடன்' இதழில் ‘எங்கள் ஊர் செம்மங்குடி' என்று ஒரு கட்டுரையும், பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ‘எனக்குப் பெயர் கொடுத்தவர்!' என்று ஒரு கட்டுரையும் மட்டுமே மௌனி எழுதி உலகுக்கு அறிமுகமாகியுள்ளவை. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு குறுநாவல் காணாமற் போய்விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக்கொண்டு போனதும் ஆகும். அவரைப்பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப்பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்துகொள்ள இயலவில்லை. அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகிய எழுத்தாளர் ஜே.வி.நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.ஜே.வி.நாதனின் எழுத்து நடையில் மௌனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது. மௌனியின் ‘தவறு', ‘அத்துவான வெளி' ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மொழி வளர்ச்சி இயலாளரான திரு.ஆல்பர்ட் பி. ஃபிராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமர்சனம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், அவரின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

Product Description

ஜே.வி.நாதன்

ரூ.75/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

Product added date: 2016-09-22 18:15:39
Product modified date: 2016-12-02 10:27:23

Export date: Tue May 7 21:42:53 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.