மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be/
Export date: Sat Apr 27 4:20:32 2024 / +0000 GMT

யோகா

Price: 85.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be/

Product Summary

‘வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!' என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை எல்லாம் இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நடப்பது என்பதுகூட இன்று உடற்பயிற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நடந்து செல்வதுகூட அவமானமாகப் பார்க்கப் படுகிறது. நடந்து செல்பவனின் பொருளாதாரத்தை அளவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள கடன் வாங்கியாவது வாகனத்தை வாங்கிவிடுகிறோம். இது வர்த்தக நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்ற போலி பிம்பம். அதை உண்மை என நம்பி நாமும் வீழ்ந்துவிடுகிறோம். இந்த இயந்திர வாழ்க்கை நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எளிமையான வழி யோகாதான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும். ஆனால், முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மன நலமும் பேணப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மன நலம் மறைமுகமாக காரணியாக இருக்கிறது. யோகா என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு, மன மற்றும் உடல் பயிற்சிக் கலை. இந்தக் கலைக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்தான் இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன மாதிரியான நன்மைகள் வரும் என்பது போன்ற பல தகவல்கள் அனுபவபூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிப்பதன் மூலமாக யோகா குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைத் தகவல்கள் உங்களின் அடுத்தகட்ட தேடலுக்கான ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் அனைத்தும் தீர்ந்திருக்கும்!

Product Description

சி.அண்ணாமலை

ரூ.85/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

Product added date: 2016-09-26 18:42:21
Product modified date: 2016-12-02 12:11:08

Export date: Sat Apr 27 4:20:32 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.