மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-a-to-z/
Export date: Tue May 7 20:52:07 2024 / +0000 GMT

லேப்டாப் A to Z

Price: 170.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-a-to-z/

Product Summary

அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை' என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள். அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப். பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், பிசினஸ் புள்ளிகள் என அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று எண்ணுகின்றனர். லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கினால் போதாது. பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனம் அது என்பதால், செல்லும் இடங்களில் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்துக்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். எனவே லேப்டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். நாம் லேப்டாப்பை எங்கேயும், எப்போதும் பயன்படுத்தி தங்கு தடையின்றி பல வேலைகளை முடிக்கலாம். இணையதளத்தின் துணையோடு லேப்டாப் ஒன்று இருந்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் உலகையே வலம் வரலாம். ஆகவேதான் இப்போதெல்லாம் லஞ்ச் பேக் சுமப்பவர்களைவிட லேப்டாப் பேக் சுமப்பவர்கள் அதிகம். லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, அதைத் தொடர்ந்து எந்த பிரேண்ட், என்ன கான்ஃபிகரேஷன், சாஃப்ட்வேர்கள் தேவை; அவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது போன்ற பல சந்தேகங்கள் எழக்கூடும். கவலையை விடுங்கள். உங்களின் சந்தேகங்களுக்கெல்லாம் விடைகிடைத்து விட்டது. தொழில்நுட்ப ரீதியாக, தெளிவாக பல படங்களுடன் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. லேப்டாப்புடன் எக்ஸ்டர்னல் டிரைவ்கள், கேமரா, மொபைல் போன், ஐபாட், ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்துவது, இன்டர்நெட் இணைப்பை பெறும் விதம் போன்றவையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பல நுணுக்கமான விஷயங்களை, சுலபமாக கையாள்வதற்கு தகுந்த வகையில் தனித்தனி வழிமுறைகளோடு இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். லேப்டாப் பயன்பாட்டின் அடிப்படை ஞானமே இல்லாதவர்கள்கூட எளிதாக லேப்டாப்பை பயன்படுத்தலாம். மொத்தத்தில் லேப்டாப் குறித்த பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட, அனைவருக்கும் உபயோகமான தொழில்நுட்ப நூல் இது.

Product Description

காம்கேர் கே.புவனேஸ்வரி

ரூ.170/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.277 kg

Product added date: 2016-09-20 12:22:30
Product modified date: 2016-12-01 14:43:48

Export date: Tue May 7 20:52:07 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.