மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
Export date: Wed May 1 22:31:35 2024 / +0000 GMT

வின்ஸ்டன் சர்ச்சில்

Price: 165.00

Product Categories: , ,

Product Tags: , , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

Product Summary

‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்' - இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். காட்டில் கால்நடையாக அலைவதைவிட யானையின் மீது அமர்ந்து போவது எளிது. யானை, துதிக்கையால் ஊசியை எடுக்கும். மரத்தை வீழ்த்தும். அதன் முதுகின் மேலிருந்து எல்லாவற்றையும் காணலாம். இதைத்தான் சர்ச்சில் செய்தார். பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர். ‘செய்தியை எழுதிக்கொண்டிருப்பதைவிட, ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது' என்று அவர் தனது முதல் நூலில் ஒரு கருத்தை வெளியிட்டதற்கு ஏற்ப அவருடைய அமைதியற்ற உள்ளம் போரில் ஈடுபட விரும்பியது. இருபத்துமூன்று வயதில் போர் அனுபவங்களும், அரசியல் அறிவும், உலக மக்களைப்பற்றிய அறிவும் பெற்றிருந்த வின்ஸ்டன், சாவ்ரோலா என்ற புதினத்தை எழுதினார். அதன் கதாநாயகன் சாவ்ரோலா அடைந்த வெற்றிகளைப் பிற்காலத்தில் சர்ச்சிலும் அடைந்தார் என்பதுதான் வியப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலின் அகராதியில் ‘செயல்' என்றால் ‘போர்' என்று பொருள். அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார். அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எட்டுப் படைகளில் அவர் பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர்களுக்கு முன்னர் அவர் நான்கு படையெடுப்புகளில் பங்கு பெற்றிருக்கிறார். போர் நிருபராகப் பெருந்தொண்டு புரிந்துள்ளார். இரு உலகப்போர்களையும் இயக்கி வெற்றி குவித்த பெருமை அவருடையது. வெற்றி ஒன்றையே சுவைக்க விரும்பிய அஞ்சாநெஞ்சனின் அற்புத வரலாற்றை தமிழ் வாசகர்களுக்காக முழுவதுமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் எம்.எக்ஸ்.மிராண்டா! வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கைச் சரித்திரம் படிக்கப் படிக்கப் சுவைக்கும். எத்தனை போர்கள்.. எத்தனை அரசியல்கள்.. எத்தனை துரோகங்கள். சர்ச்சிலின் சரித்திரத்திலிருந்து பாடம் கற்போம்!

Product Description

எம்.எக்ஸ்.மிராண்டா, எம்.ஏ., பி.டி.

ரூ.165/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.277 kg

Product added date: 2016-09-29 17:30:31
Product modified date: 2016-12-02 13:08:31

Export date: Wed May 1 22:31:35 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.