Sale!

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

200.00 190.00

Categories: , Tag:
   

Description

இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பான பழங்கதைகள். அந்தக் கால எழுத்து, பதிப்பக உறவுகள் பற்றியும் கடந்து வந்த பாதை பற்றியுமான பதிவுகள். இந்தப் புத்தகம் முதல்பதிப்பாக வெளிவந்த காலத்துக்குப் பிறகு சமூக நிலைகள் வெகுவாக மாறியுள்ளன. குடும்பத்திலும் சமூகத்திலும் இலக்கியம் மற்றும் பல தளங்களிலும் பெண்களும் ஆண்களும் இயங்கும் விதம் மாறியுள்ளது. பெண்கள் தங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமும் இப்போது வலு கூடி இருக்கிறது. கவிதை, உரைநடை, புனைகதை, விமர்சனம், மொழியாக்கம் என்று இலக்கியத்திலும் கல்வி, விஞ்ஞானம், ஊடகம், சினிமா, என்று வேறு பல துறைகளிலும் பெண்களின் பங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களின் பிரச்சினைகளின் தன்மையும் பெண்-ஆண் என்ற இருமையைக் கடந்து வேறு பலவிதங்களில் விஸ்தரித்துள்ளது. பெண்கள் பலர் பதிப்பாளர்களாகவும் புத்தகம் பதிப்பது குறித்தத் தெளிவான சிந்தனைகள் உள்ளவர்களாகவும் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்கிறார்கள். வாசகர்கள் கதைகளை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் விதமும் கதைசொல்லியின் பால் அடையாளத்தை மட்டுமே ஒட்டி இல்லை. ஒரு செயல்பாட்டையோ படைப்பையோ எடை போடவோ விமர்சிக்கவோ ஏற்கவோ பல காரணங்கள் தற்போது சமூகத்திலும் இலக்கிய உலகிலும் செயல்படுகின்றன. இந்த மாறுபட்ட சமூக மற்றும் இலக்கிய வெளியில் இந்த மூன்றாம் பதிப்புக் கதைகளின் இடம் என்ன? கதைகளை அணுகும் முறைகள் மாறிவிட்ட நிலையில் இக்கதைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதுதான் இந்த மூன்றாம் பதிப்பின் முன் உள்ள சவால் என்று நினைக்கிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை”

Your email address will not be published. Required fields are marked *