மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/
Export date: Mon May 6 22:17:32 2024 / +0000 GMT

வீழ்வே னென்று நினைத் தாயோ?

Price: 100.00

Product Categories: , , ,

Product Tags: , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/

Product Summary

உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது! கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது! கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன். ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளி வந்த தொடரோடு, மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த நூல், கொடுமை செய்வதையே கடமையாகக் கொண்டுள்ள இனவெறி அரசின் வஞ்சக முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முன்னோட்டமாகத் திகழும். ‘அடக்கியவர்கள் நிலையாக ஆளப்போவதில்லை!' என்பதே கடந்த கால சரித்திரம் உணர்த்தும் பாடம்!

Product Description

சி.மகேந்திரன்

ரூ.100/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.151 kg

Product added date: 2016-09-25 11:58:25
Product modified date: 2016-12-02 10:50:46

Export date: Mon May 6 22:17:32 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.